முஸ்லிம் சமூகம் மூர்க்கமாக முன்னேற வேண்டிய காலம் இது.

post-featured-image

பிளாஸ்டிக் பொருட்களின் தடை பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்
என்பது உறுதி.

வாழ்வில் படிப்படியாகத்தான் முன்னேற முடியும் அது தான் நிலையானது என்ற இறை நியதியை விளங்கி கடுமையாக உழைக்கத் தயாராகவுள்ள இளைஞர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.

எங்கும் எதிலும் என்று நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் எளிதில் மக்காத மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் எதில் அதிகம் என்பதை கண்டறிந்து அதற்கான மாற்று பொருட்களை வடிவமையுங்கள்.

மிக மிக குறைவான விலையில் தரமான பொருளாக தனித்துவமான பிராண்ட் அடையாளத்துடன் அவை சந்தைப்படுத்தப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு உணவகங்களில் பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றை கண்டுபிடியுங்கள்.

பாக்கு மட்டை,பனை ஓலை,தென்னங்கீத்து,வாழை இலை,தாமரை இலை, தேங்காய் நார்,காகிதம்,மரக்கூல், இன்னும் வேற என்னவெல்லாம் மனிதனுக்கும் பூமிக்கும் தீங்கிழைக்காத இயற்கை பொருட்கள் இருக்கின்றனவோ அதிலிருந்து உணவக பயன்பாட்டிற்கு எப்படி பொருட்களை தயாரிக்க முடியும் என்று ஆய்வு செய்து தயாரித்து சந்தைக்கு கொண்டு வாருங்கள்.

சர்வதேச சந்தையை மனதில் வைத்து உள்ளுர் சந்தைக்கு முதலில் முயற்சி செய்யுங்கள்.

புதிய முயற்சிகள் எல்லாமும் வெற்றியடைந்து விடாது. ஒன்றில் வெற்றியடைகின்ற வரை இறை உதவியைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.

உங்களின் கனவையோ உள்ளத்தில் உதித்ததையோ ஆசைஆசையாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் போது “அதெல்லாம் சிரமமான காரியம் ” “ஏம்பா ரிஸ்க் எடுக்கிற ” ” ஈசிய சம்பாதிக்கிற வழியைப் பார் ” என்று எந்த மேதாவியாவது சொன்னால் அதுபோன்ற சோம்பேறிகளை உங்கள் அருகிலேயே விடாதீர்.

புதிய முயற்சிகளே உலகத்தை நகர்த்தி செல்லும் ஆயுதம் என்பதை மறவாதீர்.

முஸ்லிம் சமூகம் மூர்க்கமாக முன்னேற வேண்டிய காலம் இது.