EEE – ECE படித்தவர்கள்  இதை முயற்சி செய்து பார்க்கலாம்….! 

post-featured-image

பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு மற்றும் சொற்பொழிவுகளை ஒரு கி.மீ சுற்றளவுக்கு ஒலிபரப்பு செய்யும் கருவியையும் அதை வீடுகளில் கடைகளில் அல்லது வாகனங்களில் செல்வோர் கேட்கின்ற வகையில் ரிஸீவர் டிவைஸையும் யாராவது வடிவமைத்து சந்தைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அந்த ரிஸீவர் டிவைஸை மக்கள் அனைவரும் வாங்கும் வகையில் ஒரு 1000 – 1500 ரூபாய்க்குள் இருந்தால் பயன்பாடு அதிகரிக்கும்.

பெருநகரங்களில் பள்ளிவாசலை விட்டு வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்கு பாங்கு சப்தம் கேட்பதில்லை பயான் கேட்க முடிவதில்லை என்ற மனக்கவலை இதன்மூலம் ஓரளவிற்கு குறையும்.

அதிகமான பள்ளிவாசல்கள் உள்ள மஹல்லாவில் வெள்ளிக்கிழமை பயான் சப்தம் ஒரே நேரத்தில் வருவதால் எதையும் உருப்படியாக கேட்க முடிவதில்லை. இந்த ரிஸீவர் இருந்தால் விரும்புகிற பள்ளியின் பயானை மட்டும் அமைதியாக கேட்க முடியும்.

EEE – ECE படித்துவிட்டு யாராவது வேலை தரமாட்டார்களா என்று ஏங்கும் சகோதரர்கள் இந்த டிவைஸ் குறித்து சிந்திக்கவும்.

உயர்தரமாக தயாரித்தால் இந்தியா முழுவதும் வணிகம் செய்யும் வாய்பிருக்கிறது