தமிழக முஸ்லிம் சமூகம் ஆன்மிகம் முன்னிலைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கும் அமைதியான நோய்களற்ற குடும்ப அமைப்பு முறைக்கும் மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் இன்றைய முதலாளித்துவ பெருநகரங்களை ( நரகத்தை ) விட்டு அவரவர் பிறந்த இஸ்லாமிய நகரங்களில் (மஹல்லா) குடிஅமர வேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.
மஹல்லாக்களில் குடியமர விரும்பும் மக்கள் தங்களுக்கு நிலையான நீடித்த வருவாய் ஈட்டித்தரும் வாய்ப்புகளை எப்படி அமைத்துக் கொள்வது என்பது தொடர்பான வகுப்புகளை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
இன்ஷா அல்லாஹ்…..வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க அரங்கத்தில் தற்சார்பு வாழ்வியல் குறித்த சிறப்பு வகுப்பு நடைபெற உள்ளது.
வேளாண் விஞ்ஞானி திரு.பாமயன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்.