தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில்
உம்மத்தில்…..
ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் – பெருவணிகர்கள் – தொழில்முனைவோர்
ஒருங்கிணைப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்…….
👉 வணிகம் என்பது தனிப்பட்ட மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் அது அவரவர் சார்ந்த சமூகத்தின் அங்மாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கு சமூக பாதுகாப்பும் தலைமுறை தாண்டி நீடித்து நிற்கும் வலிமையும் உண்டாகும்.
👉 கூடி தொழில் செய்யும் மனபக்குவம் வராத வரை முஸ்லிம்கள் வணிகத்தில் பெட்டிக்கடை நிலையை தாண்ட இயலாது. அதற்கென்று சிறப்பு உளவியல் பயிற்சியை (தர்பியத்) பெற்றவர்களால் மட்டுமே கூட்டாக இணைந்து செயல்பட முடியும்.
👉 உலகிலேயே வாங்கும் திறன் (Purchasing Capacity) அதிகம் கொண்டவர்களாக இன்னும் 50 ஆண்டுகளுக்கு அரபுகளே முதலிடம் வகிக்கப் போகின்றனர். மலையாளிகளைப்போல சிந்திகளைப்போல ஆறு அரபு நாடுகளை குறிவைத்து தமிழக முஸ்லிம்களின் வணிக முன்னெடுப்புகள் திட்டமிடப்பட வேண்டும்.
👉 ஏட்டுக்கல்வி எப்படி பொதுவுடமையோ அதேபோல அனுபவக் கல்வியும் பொதுவானது. அறிவையும் அனுபவத்தையும் மறைத்து தனியுரிமை கொண்டாட இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் முதல்வர் சீரிய சிந்தனையாளர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் தொழில் முனைவோரின் உள்ளங்களில் படியும் வகைவகையான அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.
ஆயத்த ஆடை தெழிலில் மூத்த அனுபவசாலிகள் 5 பேர் இம்மாநாடடில் கலந்து கொண்டு தங்களது முதிர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இன்றைய இளம் தொழில்முனைவோர் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வை சொல்லிக் கொடுத்தனர். தமிழக முஸ்லிம்களின் வணிக வரலாற்றில் இதுபோன்று நடப்பது முதல் முறை என்று கலந்து கொண்ட அனைவரும் கருத்து தெரிவித்தனர்.