குடும்பத்தை பாதுகாக்கும் எளியவழியை
நல்லசோறு ராஜ முருகன் அவர்கள் எடுத்துச்
சொல்கிறார்.
—————————————————————————-
கோவிட் வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் நமது உணவுகள் நோய்எதிர்ப்புத்திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக நோன்பு காலங்களில் குறைவான உணவு – சத்தான உணவு என்ற அழகிய நபிவழியை நாமும் பின்பற்றி நமது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்.
நோன்புக் கஞ்சிக்கான விளம்பரங்கள் கலர்கலராக வரத் துவங்கிவிட்டன. பட்டை தீட்டப்பட்ட வெள்ளைப் பச்சரிசி கஞ்சியைவிட விலை சற்று கூடுதலானாலும் அதை பொருட்படுத்தாமல் நோய்எதிர்ப்புத்திரனை அதிகரிக்கும் சிறுதானிய நோன்புக்கஞ்சியை வீடுகளில் காய்ச்சும் வழக்கத்தை உண்டாக்குவோம்.
நகரங்களிலும் கிராமங்களிலும் சிறுதானிய நோன்புக்கஞ்சி வியாபாரத்தை பெண்கள் வீடுகளிலேயே துவங்கலாம்.எந்த சூழலிலும் தரத்திலும் நேர்மையிலும் சமரசம் செய்வதில்லை என்று உறுதியான முடிவுடன் இறங்கினால் மகத்தான பரக்கத்தை அல்லாஹ் வழங்குவான்.
வீடுகளில் தயாரிக்கும் சூழல் இல்லாதவர்கள் சிறுதானிய கஞ்சியை யார் தரமாக ருசியாக அறவொழுக்கத்துடன் தயாரிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்துவோம்.
இந்த வீடியோவையும் செய்தியையும் அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
– CMN SALEEM