வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 3

post-featured-image

கூட்டு வணிகம் மட்டும்தான் முஸ்லிம்களின் வணிகப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.அந்த கூட்டு வணிகத்திற்கு ஆதாரமாக விளங்குவது இரண்டு விடயங்கள்.

👉 ஒன்று – கூடித் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளும் ஆழமான உளவியல் பயிற்சி.

இந்தப் பயிற்சி தொய்வடைந்தால் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனோடு எதிலுமே இணைந்துப் பயணிக்க முடியாது. தனிமனித முன்னேற்றத்திற்கு வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய அருமருந்து.

👉 இரண்டு – அந்த உளவியல் பயிற்சியை பெற்றுக் கொண்டவர்கள் சேர்ந்து வணிகத்தை துவங்குவதற்கு முன்பு தங்களுக்கு இடையே எழுதிக் கொள்ளும் நடத்தை விதி (Code of Conduct).

இஸ்லாமிய அடிப்படையில் இந்த இரண்டுக்குமான வழிகாட்டிகள் உம்மத்தில் அதிகரிக்கும்போது முஸ்லிம்களிடம் கூட்டுத்தொழில் நிச்சயம் வளர்ச்சியடையும்.

————————————————————-

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 17.4.2020 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு இந்த உளவியல் வகுப்பை சிந்தனையாளர் மெளலவி முஸ்தஃபா காஸிமி அவர்கள் வழங்க இருக்கிறார்கள்.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், 8220008902 என்ற Whatsapp – எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.