எண்ணெய் வளம் அதிகரித்த 1965 முதல் தமிழக முஸ்லிம் சமூகம் வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறது. கேரள சமூகம் போல வணிக ஆர்வமும் தொலைநோக்கு இலக்கும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் மாத ஊதியப் பணியாளர்களாகவே காலம் தள்ளும் நிலைதான் இன்றும் நிலவுகிறது.
பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருவதால் 10 -15 ஆண்டுகள் பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் பலரும் வேலையிழந்து ஊர் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
அரபுலகின் வணிகத்தில் கவனம் செலுத்திய சமூக மக்களுக்கு இந்த பொருளாதார மந்தநிலை அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை. இப்போது கொரோனாவும் சேர்ந்துகொண்டு சுழற்றி அடிக்கிறது.
.
இன்றைய அரபுலகின் வணிக சூழல் என்ன…..? தொழில் நிறுவனங்களை துவங்குவதற்கான தயாரிப்புகள் என்ன….? எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து எந்தெந்த பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கும்…? .
இன்ஷா அல்லாஹ்…. நாளை 28 – 4 -2020 செவ்வாய்க்கிழமை இந்திய நேரம் 3.30 மணிக்கு Online / Zoom நிகழ்ச்சியில் அலசுவோம்.
மஸ்கட்டிலிருந்து மின்னணு பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அப்துல் கஃபார் அவர்களும் அபுதாபியிலிருந்து தொழில் ஆலோசகர் ஜெய்லானி அவர்களும் ஜித்தாவிலிருந்து தொழில் ஆலோசகர் நூருல்அமீன் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
புதிய வாய்ப்புகளை கண்டறிந்து அடுத்துவரும் காலங்களில் வளைகுடா நாடுகளின் வணிகத்தில் முழுகவனம் செலுத்திட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.
—————————————————————
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.