வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 20

post-featured-image

இழந்ததை மீட்டெடுப்போம்.
————————————————-
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில்,அதன் துணை ஆறுகளில் தமிழக உள்மாவட்டங்களில் விளைந்த உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சிறிய படகுகள் மூலம் திருமுல்லைவாசல் காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் தோப்புத்துறை போன்ற கடற்கரை பட்டினங்களுக்கு சுமந்து சென்று பெரிய பாய்மரப் கப்பல்கள் மூலம் வங்காள விரிகுடா கடலில் சீறீப்பாய்ந்து சிங்கப்பூர் பினாங்கு புருனே இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தனர்.

தமிழக கடற்கரைப் பட்டினங்களில் வாழ்ந்த வெள்ளைக் கைலி உடுத்திய, நீண்ட வெள்ளை சட்டை அணிந்த (ஜிப்பா மாதிரி), கருப்பு அல்லது ஊதா கலர் வெல்வெட் தொப்பி போட்ட மரைக்காயர்களுக்கு சொந்தமான கப்பல்கள் தான் இந்த வணிகத்தில் ஈடுபட்டவை.

இதையெல்லாம் பெருமூச்சு விட்டுக்கொண்டு கடந்துபோன வரலாறாக பேச வேண்டிய நிலைக்கு இன்று நாம் மாறிப்போய்விட்டோம்.

இப்போதும் வெள்ளை கைலி சட்டை தொப்பி இருக்கிறது கூடவே மரைக்காயர் என்ற பெயரும் ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் கப்பல் முதலாளிகள் என்ற பெருமை காணாமல் போய் வெளிநாடுகளில் மாத ஊதியத்துக்கு பணியாற்றும் வேலைக்காரர்கள் என்ற மண்ணிற்கும் மரபிற்கும் பொருந்தாத அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களுக்கு வணிக ஆர்வத்தை ஊட்டுவோம்.இழந்த வணிகப் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்.

பாய்மரக்கப்பலில் கடலில் மிதந்து சென்ற அதே பொருட்கள் இன்று மதுரை திருச்சி விமான நிலையங்களில் இருந்து பறக்கும் கப்பல்கள் மூலம் செல்கிறது. மலேசியா சிங்கப்பூர் புருனே இந்தோனேஷியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி வணிகம் தொடர்பானஅனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார் பயிற்சியாளர்
முபின் ஜியாவுதீன்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் இந்த Online / Zoom வகுப்பு இன்ஷா அல்லாஹ் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு (இந்திய நேரம்) துவங்க உள்ளது.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.