முஸ்லிம் உம்மத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவை துறை (Service Sector) உள்ளிட்டவைகளால் மட்டும் தான் வழங்க முடியும்.
அதுமட்டுமல்ல இன்றைய உலகத்தின் பொருளாதார சூழலில் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் மட்டுமே வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைக்க முடியும்.
பொருள் வாங்கி விற்கும் வியாபார கலாச்சாரத்தில் (Traders) பொருளாதார வளர்ச்சி ஒரு வட்டத்துக்குள் முடங்கிப் போகும்.
அறிவியல் பொறியியல் போன்ற நவீன தொழில்நுட்ப கல்வியில் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு சிறு குறு வியாபாரிகளால் தகுதியான வேலைவாய்ப்புகளையும் வழங்க இயலாது.
வெறும் வியாபாரம் மட்டும் செய்யும் நிறுவனங்கள் ஒரு தலைமுறையை தாண்டி நிற்பதும் சிரமம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்
பொருள் வாங்கி விற்கும் சிறு குறு வியாபாரிகள் என்ற குறுகிய வட்டத்தை தாண்டி உற்பத்தித்துறையில் முஸ்லிம்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இது குறித்த ஆழமான ஒரு பயிற்சி வகுப்பு சேலத்தில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21-8-2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கலந்து கொள்ளவும்.