சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி அரங்கத்தில் 21- 8 – 2022 அன்று வணிக மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.
நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் செல்வம் பெருக்கும் இபாதத் குறித்தும் இலாபத்திற்கும் – பரக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் மிக நேர்த்தியான வகுப்பை நடத்தினார்கள்.
தலைமுறைகளைத் தாண்டிய வணிக சாம்ராஜ்யங்களை உருவாக்கும் உளவியல் காரணிகள் என்ற தலைப்பில் எனது வகுப்பு அமைந்திருந்தது.
உழைப்பிலும் வணிகத் திறனிலும் நேர்மையிலும் தமிழக முஸ்லிம்கள் பிறரை காட்டிலும் முதன்மையாக இருக்கிறோம் என்பதில் மாற்றமில்லை.
ஆனால் வணிக அணுகுமுறைகளிலும் (Business Attitude) தொலைநோக்கு இலக்கை (Vision) நிர்ணயிப்பதிலும் நாம் பலவீனத்துடன் காணப்படுகிறோம்.
இளைஞர்களின் உளவியல் தகுதிகளை வளப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் பொருளாதார வல்லமைமிக்க சமூகமாக அதிகாரம் செலுத்துவார்கள்.
இடர்பாடுகளை எதிர்கொண்டு உம்மத்தை அந்த உயரத்திற்கு உயர்த்த வேண்டிய பெருங்கடமை சமூக ஊழியர்களுக்கு இருக்கிறது.