விதவிதமான பிரியாணியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சமூகம். வீட்டு விழாக்கள் அனைத்திலும் முதன்மை உணவாக அதை உண்ணுகிற சமூகம். தொழில் முறையாக (Professional) பிரியாணி உணவகத்தை செய்கின்ற போது மட்டும் நுட்பமாக கவனம் செலுத்தாமல் விட்டது ஏன்…..?
தமிழக குக்கிராமங்களில் துவங்கப்பட்ட பல அசைவ உணவகங்கள் இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பும் நிறுவனங்களாக உயர்ந்து விட்டன.இன்னமும் நமக்கான அடையாள நிறுவனத்தை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது.
உணவகத் தொழில் தொடர்பான சாதக பாதகங்களை தஞ்சை Olive BBQ நிறுவனத்தின் மேலாளர் சகோதரர் ராஜ் ஃபரீத் அவர்களோடும், திண்டுக்கல் முஜிப் பிரியாணி நிறுவனர் சகோதரர் முஜிப் ரஹ்மான் அவர்களோடும் கலந்து பேசலாம்.உணவகத் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவும்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் இந்த Online / Zoom வகுப்பு இன்ஷா அல்லாஹ் நாளை செவ்வாய்க் கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெற உள்ளது.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளவும்.