தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து —————————————————- அ.இஜாஸ் முஸம்மில் M.Com —————————————————- சரக்கு விமானப் போக்குவரத்து (Air Cargo) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு வர்த்தக போக்குவரத்தாகும். உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் விரைவில் வீணாகிப் போகக்கூடிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதால் விமானப் போக்குவரத்து இன்றியமையாததாக மாறியிருக்கிறது. உலக வர்த்தக மதிப்பில் ஒரு விழுக்காடிற்கும் குறைவாகவே சரக்கு...
உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம் ————————————————- — இஜாஸ் முஸம்மில் M.Com — ————————————————- உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகம் தொட்ட காலத்திலிருந்தே போக்குவரத்து இருந்துகொண்டே தான் வருகிறது. இதில் கடல் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. சாதாரண போக்குவரத்தாக இருந்த கடல் வழிப் பயணம், காலப் போக்கில் வணிகத்திற்கும் பயன்பட ஆரம்பித்தது. இன்று கடல்வழி வாணிபம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு உருவெடுத்துள்ளது. சுமார்...
குடும்பத்தை பாதுகாக்கும் எளியவழியை நல்லசோறு ராஜ முருகன் அவர்கள் எடுத்துச் சொல்கிறார். —————————————————————————- கோவிட் வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் நமது உணவுகள் நோய்எதிர்ப்புத்திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக நோன்பு காலங்களில் குறைவான உணவு – சத்தான உணவு என்ற அழகிய நபிவழியை நாமும் பின்பற்றி நமது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம். நோன்புக் கஞ்சிக்கான விளம்பரங்கள் கலர்கலராக வரத் துவங்கிவிட்டன. பட்டை தீட்டப்பட்ட...
பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு மற்றும் சொற்பொழிவுகளை ஒரு கி.மீ சுற்றளவுக்கு ஒலிபரப்பு செய்யும் கருவியையும் அதை வீடுகளில் கடைகளில் அல்லது வாகனங்களில் செல்வோர் கேட்கின்ற வகையில் ரிஸீவர் டிவைஸையும் யாராவது வடிவமைத்து சந்தைப் படுத்தினால் சிறப்பாக இருக்கும். அந்த ரிஸீவர் டிவைஸை மக்கள் அனைவரும் வாங்கும் வகையில் ஒரு 1000 – 1500 ரூபாய்க்குள் இருந்தால் பயன்பாடு அதிகரிக்கும். பெருநகரங்களில் பள்ளிவாசலை விட்டு வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்கு...