வணிக சாம்ராஜ்யம் – புதுச்சேரி

இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில் வெற்றிக்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. வணிக சாம்ராஜ்யம் என்ற தலைப்பில் உம்மத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு இஸ்லாமிய வணிக உளவியல் மற்றும் இலாபகரமான நவீன...

நாம் ஒரு வணிகச் சமூகம் – சேலம்

சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி அரங்கத்தில் 21- 8 – 2022 அன்று வணிக மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் செல்வம் பெருக்கும் இபாதத் குறித்தும் இலாபத்திற்கும் – பரக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் மிக நேர்த்தியான வகுப்பை நடத்தினார்கள். தலைமுறைகளைத் தாண்டிய வணிக சாம்ராஜ்யங்களை உருவாக்கும் உளவியல் காரணிகள் என்ற தலைப்பில் எனது...

நாம் ஒரு வணிகச் சமூகம் – சேலம்

முஸ்லிம் உம்மத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவை துறை (Service Sector) உள்ளிட்டவைகளால் மட்டும் தான் வழங்க முடியும். அதுமட்டுமல்ல இன்றைய உலகத்தின் பொருளாதார சூழலில் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் மட்டுமே வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைக்க முடியும். பொருள் வாங்கி விற்கும் வியாபார கலாச்சாரத்தில் (Traders) பொருளாதார வளர்ச்சி ஒரு வட்டத்துக்குள்...

மூலிகை பிராய்லர் கோழி வளர்ப்பு

மூலிகை பிராய்லர் கோழி பற்றிய ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. குர்பானி ஆடுகள் மாடுகள் வளர்ப்பு பராமரிப்பு விற்பனை உள்ளிட்ட கல்நடைத் துறைபில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து திருநெல்வேலி கால்நடை பல்கலையின் முன்னாள் பேராசிரியர் முனைவர். பீர் முஹம்மது அவர்களும்….. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிராய்லர் கோழியின் தீமைகளையும் அதற்கு மாற்றாக முன்னிறுத்தப்படும் மூலிகை பிராய்லர் கோழிகள் பண்ணை அமைத்தல் தீவனம் உற்பத்தி...

இலாபமான தொழில்கள் – அறிமுக விழா 2020

இலாபமான தொழில்கள் அறிமுக விழா – 2020 ————————————————— தொழில் செய்ய வேண்டும் ஆனால் என்ன தொழில் செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இலாபமான தொழில்களை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொழிலை புதிய தளங்களுக்கு விரிவாக்கம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு உதவிடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இலாபகரமான தொழில் வணிக திட்டங்கள் குறித்த ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் ” புதிய...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 21

விதவிதமான பிரியாணியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சமூகம். வீட்டு விழாக்கள் அனைத்திலும் முதன்மை உணவாக அதை உண்ணுகிற சமூகம். தொழில் முறையாக (Professional) பிரியாணி உணவகத்தை செய்கின்ற போது மட்டும் நுட்பமாக கவனம் செலுத்தாமல் விட்டது ஏன்…..? தமிழக குக்கிராமங்களில் துவங்கப்பட்ட பல அசைவ உணவகங்கள் இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பும் நிறுவனங்களாக உயர்ந்து விட்டன.இன்னமும் நமக்கான அடையாள நிறுவனத்தை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது. உணவகத் தொழில்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 20

இழந்ததை மீட்டெடுப்போம். ————————————————- நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில்,அதன் துணை ஆறுகளில் தமிழக உள்மாவட்டங்களில் விளைந்த உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சிறிய படகுகள் மூலம் திருமுல்லைவாசல் காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் தோப்புத்துறை போன்ற கடற்கரை பட்டினங்களுக்கு சுமந்து சென்று பெரிய பாய்மரப் கப்பல்கள் மூலம் வங்காள விரிகுடா கடலில் சீறீப்பாய்ந்து சிங்கப்பூர் பினாங்கு புருனே இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வணிகம்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 18

பெண்களில் தொழில்முனைவோர் அதிகரிப்பது சமூகத்திற்கு பெரும் நன்மை சேர்க்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் புழக்கத்தில் உள்ள ஓரளவுக்குப் படித்த பெண்கள் இந்த கொரோனா காலத்திற்குப் பிறகு மாற உள்ள சூழலை கணித்து தங்களது சக்திக்கும் குடும்ப சூழலுக்கும் ஏற்ற வகையிலான தொழில் பிரிவை முன்னெடுக்கலாம். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 2- 5-2020 மாலை...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 17

அரபுலகின் தேவைகளையும் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும் மிகச்சரியாக கணித்து அதற்கேற்ற உணவுப் பொருட்களையும் உற்பத்திப் பொருட்களையும் வணிகம் செய்பவர்கள் குறுகிய காலத்தில் மகத்தான வளர்ச்சியை அடைகின்றனர். வளைகுடா நாடுகளில் பெருகும் வணிக வாய்ப்புகள் Part -2. இன்ஷா அல்லாஹ் நாளை 1 – 5 – 2020 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரத்திற்கு) Online / Zoom வகுப்பு நடைபெற உள்ளது. கத்தாரிலிருந்து சகோதரர் ஹபீபுர்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 15

மனித மனங்களை அழகாக இணைப்பதற்கும்…. மண உறவுகளில் ஏற்படும் விரிசல்களை தவிர்த்துக் கொள்வதற்கும்……சமூகசூழலை அமைதியாக்கிக் கொள்வதற்கும்…..தெளிவான வழிகாட்டுதலை தருகிறார்கள் தகுதிமிக்க இரு மருத்துவர்கள். Dr.முஹம்மது இப்ராஹிம் (Surgical Oncologist) அவர்களோடும், Dr.நூருல் ஹஸன் (Psychiatrist) அவர்களோடும் இன்ஷா அல்லாஹ்……நாளை புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரம்) Online / Zoom வகுப்பில் கலந்துரையாட இருக்கின்றோம். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெறும் இந்த வகுப்பில் கலந்து...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 14

எண்ணெய் வளம் அதிகரித்த 1965 முதல் தமிழக முஸ்லிம் சமூகம் வளைகுடா நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறது. கேரள சமூகம் போல வணிக ஆர்வமும் தொலைநோக்கு இலக்கும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் மாத ஊதியப் பணியாளர்களாகவே காலம் தள்ளும் நிலைதான் இன்றும் நிலவுகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருவதால் 10 -15 ஆண்டுகள் பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் பலரும் வேலையிழந்து ஊர் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது....

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 13

சிறுதானிய உற்பத்தி,பயன்பாடு, உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகள் போன்றவை குறித்த முக்கியமான தகவல்களை நல்லசோறு அமைப்பின் தலைவர் ராஜ முருகன் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பைசல் அகமது அவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இன்ஷா அல்லாஹ்…..நாளை 27 – 4 -2020 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0091 8220008902 என்ற Whatsapp எண்ணில் முன்பதிவு...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 12

பெறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லாதீர்…….! அமெரிக்காவிலிருந்து சகோதரர் M.Shabeer, Senior Manager,Cognizant Solutions. அவர்களேடும்…. குவைத்திலிருந்து சகோதரர் Dr.Mohamed Ibrahim, Senior Network Security Consultant. அவர்களோடும்…… தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information Technology) பெருகும் சர்வதேச வணிக வாய்ப்புகள் குறித்து Zoom / Online வகுப்பில் கலந்துரையாட உள்ளோம். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இன்ஷா அல்லாஹ்…..நாளை 26 – 4 -2020...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 9

தமிழக வேளாண் விளை பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களை கிழக்கிற்கும் மேற்கிற்கும் கடல்வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்த பெருமைமிக்க வணிகப் பாரம்பரியம் தமிழக முஸ்லிம்களின் மதிப்புமிக்க அடையாளங்களில் ஒன்று. வரலாற்றுத் தொடர்பு இல்லாமல் போனதால் இன்றைய தலைமுறைக்கு இந்த செய்திகளெல்லாம் ஆச்சரியத்தை தரும் செய்திகளாக மாறிவிட்டன. பாரம்பரிய பொருளீட்டும் முறைகளில் தொடர்பு அறுந்துவிடாமல் கால மாற்றதிற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 8

ஆன்மிகத் தொடர்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் வணிகம் அது எவ்வளவு திறமையான மனிதர்களால் திட்டமிடப்பட்ருந்தாலும் அது வெற்றி பெறாது. பரிவர்த்தனையின் அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் சமூகத்திற்கு சரியான பலன் கிடைக்காது. வணிகத்தில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்கு ஆன்மிகத் தொடர்பே அருமருந்தாகவும் பாதுகாப்பு கேடயமாகவும் இருக்கிறது. —————————————————– தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 7

Travel Tourism / Hospitality / Social Development பெரும் வளரச்சி கண்டுள்ள இந்த முதல் இரண்டுத் துறைகளில் அடுத்தடுத்த காலங்களில் நமக்கான தொழில் வாய்ப்புகள் குறித்தும்…… பிறசமூகங்கள் தங்களுக்குள் கட்டமைத்துக்கொண்ட தொழில் வளர்ச்சி சங்கங்கள் அவற்றின் சேவைகள் குறித்தும் இன்ஷா அல்லாஹ்….நாளை அலசலாம். —————————————————————– தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 6

ஒரு வணிக நிறுவனத்தின் வெற்றி என்பது அதை முன்னெடுத்து செல்லும் தலைமகன் வளர்த்துக் கொண்ட, அவ்வப்போது வெளிப்படுத்திய சில சிறப்புப் பண்புகளில் அடங்கியுள்ளது. தலைமைத்துவத்தின் தகுதியை யார் வளர்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே சாதாரண வணிக நிறுவனத்தை சாதனைக்குரிய வணிக சாம்ராஜ்யமாக மாற்றிடும் தொலைநோக்குப் பார்வை இருக்கும். ————————————————— தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 5

உள்ளத்திற்கு ஆன்மீகப் பயிற்சியும் அறிவுக்கு நுட்பமான வழிகாட்டலும் ஒருசேரப் பெற்றவர்களால் மட்டுமே உலகை வெல்ல முடியும். வணிகத்தில் துணிச்சலான முடிவுகள் எடுப்பதற்கான பயிலரங்கம். ———————————————— தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom meeting / Online வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்…. 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு ஷெய்க் முபாரக் மதனி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்....

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 3

கூட்டு வணிகம் மட்டும்தான் முஸ்லிம்களின் வணிகப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.அந்த கூட்டு வணிகத்திற்கு ஆதாரமாக விளங்குவது இரண்டு விடயங்கள். 👉 ஒன்று – கூடித் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளும் ஆழமான உளவியல் பயிற்சி. இந்தப் பயிற்சி தொய்வடைந்தால் ஒரு மனிதனால் இன்னொரு மனிதனோடு எதிலுமே இணைந்துப் பயணிக்க முடியாது. தனிமனித முன்னேற்றத்திற்கு வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய அருமருந்து. 👉 இரண்டு – அந்த உளவியல்...

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 2

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் வணிக மேம்பாடு குறித்த Zoom / Online தொடர் வகுப்பில் இன்ஷா அல்லாஹ்…… நாளை காலை 11.30 – 12.30 மணிக்கு வளைகுடா நாடுகளில் சிந்தி சமூகத்தின் வணிக வளர்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். மேலும் அந்த நாடுகளில் வணிகம் செய்யும் இரண்டு தொழில் முனைவோர் தங்களின் அறிவையும் அனுபவங்களையும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்....

வணிக மேம்பாடு குறித்த இணையதளக் கருத்தரங்கம் – 1

குறைவான முதலீட்டில் கால்நடை வளர்ப்பில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து மருத்துவர் பேராசிரியர் பீர் முஹம்மது அவர்களுடன் இன்ஷா அல்லாஹ்……நாளை மதியம் 12.30 மணிக்கு கலந்துரையாட இருக்கின்றோம். இந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்கள் அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்டுத் தெளிவு பெறலாம். பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கு 0091 8220008902 என்ற WhatsApp எண்ணில் முன்பதிவு செய்யவும்.

ஆயத்த ஆடைகள் ஒருங்கிணைப்பு மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் உம்மத்தில்….. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் – பெருவணிகர்கள் – தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்……. 👉 வணிகம் என்பது தனிப்பட்ட மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் அது அவரவர் சார்ந்த சமூகத்தின் அங்மாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கு சமூக பாதுகாப்பும் தலைமுறை தாண்டி நீடித்து நிற்கும் வலிமையும் உண்டாகும். 👉 கூடி தொழில்...

இயற்கை வேளாண் பொருட்கள்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் ஒருங்கிணைப்பு மாநாடு அன்னை கதீஜா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில் முனைவோர் என அதிகமானவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். உற்பத்தியாளர்களில் பெண்கள் பலர் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வகுப்பெடுத்தது மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு இது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக...

தற்சார்பு வாழ்வியல்

தமிழக முஸ்லிம் சமூகம் ஆன்மிகம் முன்னிலைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கும் அமைதியான நோய்களற்ற குடும்ப அமைப்பு முறைக்கும் மீண்டும் திரும்ப வேண்டும் என்றால் இன்றைய முதலாளித்துவ பெருநகரங்களை ( நரகத்தை ) விட்டு அவரவர் பிறந்த இஸ்லாமிய நகரங்களில் (மஹல்லா) குடிஅமர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். மஹல்லாக்களில் குடியமர விரும்பும் மக்கள் தங்களுக்கு நிலையான நீடித்த வருவாய் ஈட்டித்தரும் வாய்ப்புகளை எப்படி அமைத்துக்...

நாம் ஒரு வணிக சமூகம்

” நாம் ஒரு வணிக சமூகம் “ ரியாத்தில்…. தொழில் வர்த்தக கருத்தரங்கம் ******************************* வணிகத்தில் முதன்மை சமூகம் என்ற சிறப்பான அடையாளத்தை பெற்றிருந்த தமிழக முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தன் பாரம்பரியம் அறியாமல் மாத ஊதிய பணியாளர்களாக மாறிவரும் இன்றைய படித்த இளைய தலைமுறையிடம் வணிகத்தின் மேன்மையை விதைக்கும் முயற்சி இது. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இன்ஷா அல்லாஹ்…. வருகின்ற...