இன்றைய உலகில்,தொழில் ஈடுபாடும் தேடலும் உள்ள ஒரு மனிதனால் தன் தொழில் வளர்ச்சிக்கான அறிவையும் வழிகாட்டுதலையும் மிக எளிதாக பெற்றுக் கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அறிவைக் காட்டிலும் அவனது குணமும் அணுகுமுறையும் தொலைநோக்கு இலக்கும் தான் தொழில் வெற்றிக்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. வணிக சாம்ராஜ்யம் என்ற தலைப்பில் உம்மத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு இஸ்லாமிய வணிக உளவியல் மற்றும் இலாபகரமான நவீன...
சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி அரங்கத்தில் 21- 8 – 2022 அன்று வணிக மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மெளலவி முஹம்மது யஹ்யா தாவூதி ஹஸ்ரத் அவர்கள் செல்வம் பெருக்கும் இபாதத் குறித்தும் இலாபத்திற்கும் – பரக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் மிக நேர்த்தியான வகுப்பை நடத்தினார்கள். தலைமுறைகளைத் தாண்டிய வணிக சாம்ராஜ்யங்களை உருவாக்கும் உளவியல் காரணிகள் என்ற தலைப்பில் எனது...
முஸ்லிம் உம்மத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை முன்னெப்போதைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவை துறை (Service Sector) உள்ளிட்டவைகளால் மட்டும் தான் வழங்க முடியும். அதுமட்டுமல்ல இன்றைய உலகத்தின் பொருளாதார சூழலில் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் மட்டுமே வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைக்க முடியும். பொருள் வாங்கி விற்கும் வியாபார கலாச்சாரத்தில் (Traders) பொருளாதார வளர்ச்சி ஒரு வட்டத்துக்குள்...
மூலிகை பிராய்லர் கோழி பற்றிய ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. குர்பானி ஆடுகள் மாடுகள் வளர்ப்பு பராமரிப்பு விற்பனை உள்ளிட்ட கல்நடைத் துறைபில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து திருநெல்வேலி கால்நடை பல்கலையின் முன்னாள் பேராசிரியர் முனைவர். பீர் முஹம்மது அவர்களும்….. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிராய்லர் கோழியின் தீமைகளையும் அதற்கு மாற்றாக முன்னிறுத்தப்படும் மூலிகை பிராய்லர் கோழிகள் பண்ணை அமைத்தல் தீவனம் உற்பத்தி...
இலாபமான தொழில்கள் அறிமுக விழா – 2020 ————————————————— தொழில் செய்ய வேண்டும் ஆனால் என்ன தொழில் செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இலாபமான தொழில்களை அறிமுகம் செய்யவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொழிலை புதிய தளங்களுக்கு விரிவாக்கம் செய்ய ஆர்வமுடையவர்களுக்கு உதவிடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இலாபகரமான தொழில் வணிக திட்டங்கள் குறித்த ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் ” புதிய...
தமிழகத்தில் அதிகரிக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து —————————————————- அ.இஜாஸ் முஸம்மில் M.Com —————————————————- சரக்கு விமானப் போக்குவரத்து (Air Cargo) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு வர்த்தக போக்குவரத்தாகும். உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் விரைவில் வீணாகிப் போகக்கூடிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதால் விமானப் போக்குவரத்து இன்றியமையாததாக மாறியிருக்கிறது. உலக வர்த்தக மதிப்பில் ஒரு விழுக்காடிற்கும் குறைவாகவே சரக்கு...
உலகை ஆட்டுவிக்கும் கடல் வாணிபம் ————————————————- — இஜாஸ் முஸம்மில் M.Com — ————————————————- உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகம் தொட்ட காலத்திலிருந்தே போக்குவரத்து இருந்துகொண்டே தான் வருகிறது. இதில் கடல் பயணம் மிகவும் குறிப்பிடத்தக்கது. சாதாரண போக்குவரத்தாக இருந்த கடல் வழிப் பயணம், காலப் போக்கில் வணிகத்திற்கும் பயன்பட ஆரம்பித்தது. இன்று கடல்வழி வாணிபம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு உருவெடுத்துள்ளது. சுமார்...
விதவிதமான பிரியாணியை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த சமூகம். வீட்டு விழாக்கள் அனைத்திலும் முதன்மை உணவாக அதை உண்ணுகிற சமூகம். தொழில் முறையாக (Professional) பிரியாணி உணவகத்தை செய்கின்ற போது மட்டும் நுட்பமாக கவனம் செலுத்தாமல் விட்டது ஏன்…..? தமிழக குக்கிராமங்களில் துவங்கப்பட்ட பல அசைவ உணவகங்கள் இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பும் நிறுவனங்களாக உயர்ந்து விட்டன.இன்னமும் நமக்கான அடையாள நிறுவனத்தை உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது. உணவகத் தொழில்...
இழந்ததை மீட்டெடுப்போம். ————————————————- நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி கொள்ளிடம் ஆறுகளில்,அதன் துணை ஆறுகளில் தமிழக உள்மாவட்டங்களில் விளைந்த உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சிறிய படகுகள் மூலம் திருமுல்லைவாசல் காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் தோப்புத்துறை போன்ற கடற்கரை பட்டினங்களுக்கு சுமந்து சென்று பெரிய பாய்மரப் கப்பல்கள் மூலம் வங்காள விரிகுடா கடலில் சீறீப்பாய்ந்து சிங்கப்பூர் பினாங்கு புருனே இந்தோனேஷியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வணிகம்...
சட்டம் பயிலும் மாணவர்களுக்கான முன்மாதிரி இதோ….. ————————————————– சட்டக் கல்வியின் அவசியத்தை நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மிக அழுத்தமாக உணர்த்தி வருகின்றன. எப்படிப்பட்ட சட்ட வல்லுநர்களை உருவாக்க வேண்டும் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக தமிழக தெருக்களில் இடைவிடாமல் கத்திக் கொண்டிருக்கிறோமோ அதுபோன்ற சட்ட வல்லுநர்கள் இருவரை அறிமுகம் செய்கின்றோம். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று உலகின்...